Perambalur: Offering prayers to the sun after losing one’s eyesight! Government officials are always late; the well into which the car fell has been covered! Demand for compensation to be provided to the deceased’s family!

திருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்தவர் சத்தியசீலன் மகன் குணா (40). பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் முக்கிய அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 17-ம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு, காரில் திருச்சிக்கு சென்ற போது, பாடாலூர் அருகே விபத்திற்கு உள்ளாகி, ஹைவேயில் இருந்து கார் விலகி சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்து விபத்திற்குள்ளானது. இதில் காரில் இருந்த குணா நீரில் மூழ்கி தப்பிக்க வழியின்றி உயிரிழந்தார். ஆனால், முன்கூட்டியே அரசு விதிமுறைகள் படி தடுப்பு வேலி, அல்லது சுவர் அமைக்கப்பட்டு இருந்தால் காரில் சென்ற குணா என்பவர் உயரிழக்காமல், காயங்களுடன் உயிர் தப்பி இருப்பார்.
சுங்க கட்டணம் வசூலிக்கும் நிறுவனமும், மாவட்ட நிர்வாகமும் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடும் இந்த ஜனவரி மாதத்தில், ஒருவர் விழுந்து பலியான பிறகே அரசுக்கு சொந்தமான நிலத்தில் இருந்த அந்த கிணற்றை சுமார் 20 ஆண்டுகளுக்கு மூட நடவடிக்கை எடுக்கிறது என்றால் அரசு அதிகாரிகள் எப்படி மக்களுக்காக பணி செய்கிறார்கள் என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். சம்பள உயர்விற்காக போடுபவர்கள் சமானிய மக்களுக்காக பணி செய்வதில்லை. அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, பணம் தருபவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை செய்கின்றனர் பொதுமக்கள் நொந்து போகின்றனர்.
கட்டணம் வசூலிக்கும் டோல்பிளாசா பல்வேறு சேவைகளை செய்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், சாலை அடிபட்டு இறக்கும் விலங்குகளை அப்புறப்படுத்துவதில்லை, சாலையில் தேங்கி கிடக்கும் கல், மண்ணை சுத்தம் செய்வதில்லை, பிரேக் டவுன் ஆகும் வாகனங்களை பிக்கப் செய்வதில்லை, மேலும், விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவி செய்யும் SOS வேலை செய்யவில்லை என பல குற்றச்சாட்டுகள் டோல்பிளாசா மீது முன்வைக்கின்றனர். இதை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்வதும் இல்லை.
கிணற்றில் சிக்கி உயிரழந்த குணா என்பவரின் குடும்பத்திற்கு தடுப்பு வேலி, தடுப்பு சுவர், எச்சரிக்கை பலகை அமைக்காத டோல்பிளாசா நிறுவனமும், கண்காணிக்க தவறி, அலட்சியமாக இருந்த மாவட்ட நிர்வாகமும் இணைந்து நிர்கதியாக நிற்கும் குணா என்வரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497