Perambalur: Official Creates Awareness About Voting at Weekly Market!

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறிப்பாக கடந்த தேர்தல்களில் குறைவான அளவில் வாக்குப்பதிவான பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது, இதன் ஒரு பகுதியாக குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர் வட்டம் கொளக்காநத்தம் வார சந்தையில், தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேல் நேற்று, வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலான தகல்வகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
23.04.2026 வாக்குப்பதிவு நாள் என்றும், அன்று அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடி மையம் சென்று வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆலத்தூர் வட்டாட்சியர் கவிதா, துணை வட்டாட்சியர் ரங்கநாதன், வருவாய் ஆய்வாளர் பாலகுமார், கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497