“மக்களை நாடி மருத்துவ சேவை” என்ற சிறப்பு மருத்துவ முகாமினை மாண்புமிகு கதர; மற்றும் கிராம தொழில்வாரியத் துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி துவக்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறையின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு பாடாலூரில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் “மக்களை நாடி மருத்துவ சேவை” என்ற சிறப்பு மருத்துவமுகாம் இன்று நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாமினை கதர் மற்றும் கிராம தொழில்வாரியத் துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி துவக்கி வைத்தார்.
பின்னர், அங்கிருந்த பொதுமக்களுக்கு வழங்கப்படும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பொதுமக்களிடம் நலம் விசாரித்த மாண்புமிகு அமைச்சர் அவர;கள் கண் நோய், சிறுநீரக நோய், இரத்தம் சம்மந்தப்பட்ட நோய்கள், இதயம் சம்மந்தப்பட்ட பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகளும், தேவைப்பட்டால் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் சிகிச்சைகள் வழங்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இம்முகாமில் இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, தோல் நோய்கள், கண் நோய் சிகிச்சை, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை, கர்ப்பபை நோய்கள், குடல் சம்மந்தமான அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான பரிசோதனைகள், மூளை மற்றும் நரம்பு மண்டல சிகிச்சை என பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளும், சிகிச்சைகளும் செய்யபடுகின்றது.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன், அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமசந்திரன், முன்னாள் துணை சபாநாயகர் அ.அருணாசலம்,பால் கூட்டுறவுசங்க இயக்குனரும், ஆலத்தூர் ஒன்றிய செயலாளருமான என்.கே.கர்ணன், படாலூர் ஊராட்சித் தலைவர் அ.வேல்முருகன் மற்றும் சுகாதாரத்துறை மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.