Perambalur: Part-time ration shops in two villages within the Kunnam constituency; Minister Sivasankar inaugurated them.

பெரம்பலூர் மாவட்டம், புதுவேட்டக்குடி அருகே உள்ள காடூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில் ஒரு பகுதி நேர ரேசன் கடையும், வயலப்பாடி கிராமத்தில் ஒரு பகுதி நேர ரேசன் கடையையும், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று அதனை நிறைவேற்றும் வகையில் அதனை தொடங்கி வைத்து பொதுமக்கள் ரேசன் பொருட்களையும் வழங்கி, தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சேகர், குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை, ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், அழகு.நீலமேகம், ராஜேந்திரன், முன்னாள் வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பல்டாக்டர் கருணாநிதி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!