Perambalur: Petition to authorities seeking to remove encroachment and recover government land!

மாதிரிப் படம்

 

பெரம்பலூரில் இன்று நடந்த

பொதுமக்கள் குறைத்தீர் கூட்த்தில், நாரணமங்கலம் அருகே உள்ள ஈச்சங்காடு பகுதியை சேர்ந்த விவசாயி மோகனசுந்தரம் என்பவர் பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

நாட்டார்மங்கலம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட புல எண் 11/1 மற்றும் 11/2 ஆகிய புல எண்கள் செங்கோட்டையன் மகன் முருகேசன் என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நாரணமங்கலம் மற்றும் நாட்டார்மங்கலம் பகுதியில் உள்ள அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதே இவரின் தொடர் வேலையாக உள்ளது. அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதும் பிறகு அதற்கு பட்டா கேட்பதும் என்கின்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் தொடர்ச்சியாக இவர் ஈடுபட்டு வருகிறார். முருகேசன் ஆக்கிரமித்துள்ள நிலங்களின் மீதான ஆக்கிரமிப்பை அகற்றச் சொல்லி மனு கொடுத்தால் மனு கொடுப்பவர்களை மிரட்டுவதும் மனு கொடுப்பவர்களின் மீது பொய்வழக்கு போட்டு நீதிமன்றத்திற்கு அலைக்கழிப்பதும் என்கின்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். எனவே, இவர் ஆக்கிரமித்து வைத்துள்ள அனைத்து அரசு நிலங்களையும் மீட்டு அரசின் கட்டுப்பாட்டில் வைத்திட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்ததோடு, முருகேசனால், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்டு மீண்டும் ஆக்கிரமிக்காத வகையில் வேலி அமைத்து, மரக்கன்றுகளை வளர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!