Perambalur: Police are questioning the BJP State secretary for using fake registration numbers on his car!

பெரம்பலூர் அருகே மேலப்புலியூரை சேர்ந்தவர் சின்னதுரை மகன் பிச்சைமுத்து (50), பிஜேபி பட்டியல் அணி மாநில செயலாளராக உள்ளார். இவர் Suzuki Boleno Car ஒன்றை வைத்துள்ளார். அதில், முன்பக்கமான ஆங்கிலத்தில், பிஜேபி எஸ்.சி மோர்ச்சா பிரிவு மாநில செயலாளர் என்றும், பின்பக்கத்தில், TN 46 X 1188 என்ற பதிவெண்ணையும் காரின் பின்பக்கம் போட்டு ஊரில் வலம் கொண்டிருந்தார். இந்நிலையில், பிச்சைமுத்து, தனது மகன் சிவா (21) அழைத்துக் கொண்டு அடைக்கம்பட்டிக்கு சென்றார்.

அப்போது, து.களத்தூர் பிரிவு சாலையில் நின்றுக் கொண்டிருந்த அருணாச்சலம் மகன் பாரதி (27), மற்றும் மருதை மகன் ஆனந்த் இருவரும், அவரது நண்பரான இளஞ்செழியனிடம் போனில் பேசிய போது, காரில் போர கண்டுக்கலையே? என கேட்ட போது இளஞ்செழியன் தான் வீட்டில் இருப்பதாகவும், அது தன்னுடைய கார் இல்லை என்று தெரிவித்ததோடு, உடனே புறப்பட்டு, தனது நண்பர்களுடன் சேர்ந்து, காரில் சென்ற பிஜேபி நிர்வாகி பிச்சைமுத்துவை மடக்கி பிடித்தனர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், இளஞ்செழியன், பிச்சைமுத்துவை கையால் தாக்கினர். பிச்சைமுத்துவின் கார் சாவியை இளஞ்செழியன் எடுக்க முயன்ற போது, பிச்சைமுத்து கார் கதவை சாத்தினார். இதில். இளஞ்செழியனுக்கு இடது தோள்பட்டையில் உள்காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த, பெரம்பலூர் ஊரக காவல் நிலைய போலீசார் சம்பவ இடம் சென்று இரு தரப்பினரையும் 2 கார்களுடன் செஞ்சேரி போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருகின்றனர். அடைக்கம்பட்டியை
சேர்ந்த இளஞ்செழியன் திமுக ஆலத்தூர் மேற்கு ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளராக உள்ளார்.

போலி பதிவெண்ணை பயன்படுத்தியதை மடக்கி பிடித்து, தாக்கி கொள்ளும்  வீடியோ சமூக வலைதளங்களில் பரவி தற்போது, வைரலாகி வருகிறது. 

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!