Perambalur Police finance aid to Nepal Kabaddi player for India
பெரம்பலூர் மாவட்டம், எறையூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் பிரியதர்ஷினி, நேபாளத்தில் நடக்கும் கபாடி போட்டியில், இந்திய அணியின் சார்பாக கலந்து கொள்கிறார். அவரது விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில் பெரம்பலூர் ஏ.எஸ்.பி. ஜெ.ஆரோக்கியபிரகாசம் ரூபாய் 10 ஆயிரமும், மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்செல்வி ரூபாய் 5ஆயிரம்-ம் என மொத்தம் ரூ 15 ஆயிரத்தை, அவரது பெற்றோர் முன்னிலையில் பெரம்பலூர் 4 ரோடு அருகே வழங்கினர்.