Perambalur: Police maintain tight surveillance and security in the town and several other areas.

நடந்து முடிந்த 2026 சட்ட மன்ற தேர்தல் தவெக 108 இடங்களை பெற்று ஆட்சி அமைப்பதில் தமிழகத்தில் இழுபறி ஏற்பட்டு நிலையில் பெரம்பலூர் நகர், புறநகர் பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் அதிக அளவில் கூடும், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பாலக்கரை, கடைவீதி, 4 ரோடு, 3 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் சீருடை அணியாமலும் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து மாவட்டத்தின் முக்கிய பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497