Perambalur: Police register case against party functionary for engaging minors in election campaigning.

குன்னம் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளராக ரேவதி போட்டியிடுகிறார். இவர் கடந்த 31-ம் தேதி ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகளை சந்திக்க சென்றார். சாத்தனூர் குடிகாடு கிராமத்தில் உள்ள நிர்வாகிகளை சந்திக்க சென்றபோது, தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மேந்திரன் தனது தலைமையில் 25 பேரை பிரச்சாரத்திற்கு அழைத்து வந்து, ரேவதிக்காக பிரச்சாரம் செய்தார். அவர்களில் 7 பேர் சிறுவர்கள் என்றும், தேர்தல் நடத்தை விதிமுறைப்படி சிறுவர்களை பிரச்சாரத்திற்கு ஈடுபடுத்தக்கூடாது என உள்ள நிலையில், இது தொடர்பான காட்சிகளை கதிர் என்ற வாலிபர், சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த காட்சிகள் வைரலானது. இதுகுறித்து ஒருவர் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்திருந்தார்.

அதன் பேரில், தேர்தல் பறக்கும் படை அதிகாரியான தாசில்தார் சுதாகர், சரியான புகைப்படம் ஆதாரத்துடன், மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய மருவத்தூர் போலீசார் வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்தனர். அதில் 7 சிறுவர்கள் தவெக பதாகைகளை ஏந்தி பிரச்சாரம் செய்தது உறுதியானது. இதையடுத்து தர்மேந்திரன் மீது தேர்தல் நடத்தி விதிமுறை மீறல் தொடர்பாக எஸ்ஐ. கமலி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!