Perambalur Police SP organized a party to appreciate the community leaders who cooperated to become an example for Hindu-Muslim unity and harmony!

பெரம்பலூர் அருகே உள்ள வி.களத்தூரில், 1912 ஆம் ஆண்டு செல்லியம்மன் திருவிழாவின் போதிருந்தே, அந்தவூரில், இந்து – முஸ்லீம் இடையே தகராறு இருந்து வந்தது. பின்னர் காலப்போக்கில் விரோதமாக மாறி விரும்ப தகாத சம்பங்கள், மற்றும் நீதி மன்ற வழக்குகள் நடைபெற்று வந்தது.

மேலும். கடந்த சந்தன கூடு உரூஸ் மற்றும் முன்னாள் கலெக்டர் தரேஸ் அஹமது அரசியல் அமைப்பு சட்டத்தை எடுத்துரைத்து இரு தரப்பினரையும் உணரச் செய்தார். பின்னர், அவர் பணிமாறுதலுக்கு பின் சற்று விவகாரத்தில் மாற்றம் ஏற்பட நேர்ந்தது.

பின்னர், பதவியேற்ற போலீஸ் எஸ்.பி மணி இது குறித்து போலீசார் துணையுடன் தொடர்ந்து, அந்த ஊரை இருதரப்பினரிடையே பேச்சு நடத்தி, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதை உணரச் செய்தார். மேலும்: நல்லிணக்கத்தையும் எடுத்துரைத்தார். அதன் பேரில் இருதரப்பிலும், பரஸ்பர ஒற்றுமை ஏற்பட்டதன் அடிப்படையில், கடந்த ஜுலை.30 அன்று இந்துக்கள், முஸ்லீம் பள்ளிவாசலுக்கு சென்று திருவிழா அழைப்பிதழ் கொடுத்து வரவேற்றனர்.

ஜாமா-அத் தரப்பினர் கோவில் தேர்திருவிழாவை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். மேலும், இதனால், இருதரப்பிலும் இருந்த 110 ஆண்டு கால பகை முடிவுக்கு வந்தது. இதற்கு காவல் துறை சார்பில் இன்று போலீஸ் எஸ்.பி மணி தலைமையில் கலெக்டர் வெங்கடபிரியா முன்னிலையில் பெரம்பலூர் புதிய பேருந்து அருகே உள்ள தனியார் ஹோட்டலில் மாலை விருந்து அளித்தார். அதில் இரு தரப்பினரும் கலந்து கொண்டு விருந்து சாப்பிட்டு ஒற்றுமையுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

இதே நாடு முழுவதும் உள்ள மதத்தினர் உன் மதமா பெரிதா, என் மதம் பெரிதா! போட்டி போடாமல், நல்லவர்கள் எந்த மதமோ அந்த மதம், ஆண்டவன் அந்த மதம் என்ற கவிஞர் வாலியின் பாடல் வரிகளுக்கு ஏற்ப மதம் எதுவானாலும் மனிதனாக இருப்போம்.

தொடர்ந்து முயற்சி செய்து, இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ் எஸ்.பி மணி மற்றும் போலீசாரை பொதுமக்கள் சமூக ஆர்வலர்களும் பாராட்டுகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!