Perambalur: Private real estate company attempts to encroach on water supply line worth Rs. 1.23 crore; Public protests!
பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில், அன்னமங்கலம் கைகாட்டி அருகே தனியார் பால்பண்ணை இயங்கி வருகிறது. அந்தப் பால் பண்ணையின் தென்புறம் அரசுக்கு சொந்தமான நீர் வரத்து வாய்க்கால் கொல்லன்குட்டை மற்றும் அம்மா குட்டைகளுக்கு செல்கிறது. அந்த குட்டையின் வரத்து வாய்காலுக்கு தென்புறம், கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று விவசாய நிலத்தை பிளாட்டுகளாக போட்டு விற்க விலைக்கு வாங்கியுள்ளது. அந்த நிறுவனம் வரத்து வாய்க்கால் வாரியையும் ஆக்கிரமித்து பிளாட்டுகளை போட்டு எல்லை கற்களை நட
முயன்றதால் அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு தடுத்து நிறுத்தினர். மேலும், சுமார் ரூ. 1கோடியே 23 லட்சம் மதிப்புள்ள ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியை அந்நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதை அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அரசு நிலத்தை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.