Perambalur: Protest held demanding the provision of a Pongal bonus of Rs. 5,000 for construction and unorganized sector workers!

பொங்கல் தொகுப்புடன் ரூ. 5 ஆயிரம் வழங்க கோரியும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு கேள்விக்குறியாக்கும் தொழிலாளர் சட்ட திருத்த தொகுப்பை ரத்து செய்திட கோரியும், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை முன்பு சி.ஐ.டி.யு அனைத்து வகையான கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் சங்கங்களின் சார்பாக ஆர்ப்பாட்டம், மாவட்ட தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது.
கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின் விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மாவட்ட பொருளாளர் விஜய், மாவட்ட துணைத் தலைவர் ஜே. சரஸ்வதி, சாலையோர வியாபாரி சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன், கட்டுமான சங்கம் மாவட்ட துணை செயலாளர் கருப்பையா,. மாவட்ட நிர்வாகி ஏ. ரங்கநாதன் ரங்கராஜ், எம். பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497