Perambalur Communist Party meeting resolution Passed; 100 jobs to be created in the job guarantee scheme!

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட பேரவை கூட்டம் துறைமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எ.முருகேசன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கோகுலகிருஷ்ணன், வீரசிங்கம், கோவிந்தராஜ், முன்னிலை வகித்தனர் மாவட்ட செயலாளர் பி. ரமேஷ் வேலையறிக்கை வாசித்தார். கூட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் ஏ. பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் புதிய மாவட்ட செயலாளராக ஏ. கலையரசி, மாவட்ட தலைவராக ஏ. முருகேசன், மாவட்ட பொருளாளராக வி. காமராஜ் ஆகியோர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், 15 பேர் மாவட்ட குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜேந்திரன், குன்னம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கூட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 281 ரூபாய் கூலி வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களை காலையில் 7 மணிக்கு வர வேண்டும் என நிர்பந்த படுத்துவதை கண்டிப்பதுடன், ஒன்பது மணிக்கு தொழிலாளர்களின் வருகை தர அனுமதிக்க வேண்டும். இட மற்றவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா உடனடியாக வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் தொழிலாளர்களைத் திரட்டி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டச் செயலாளர் கலையரசி நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!