Perambalur: Public catches passenger who tried to slit the throat of bus conductor with Asha blade and hands him over to police!
இன்று காலை திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் வழியாக துறையூருக்கு தனியார் பஸ் சென்றுக் கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கீரம்பூரை சேர்ந்த பாண்டியன் மகன் விஜய் (30), கண்டக்ராக பணிபுரிந்து வந்தார்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள அலுந்தலைப்பூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் அன்பரசன் (20), பஸ்சில் அலுந்தலைப்பூரில் ஏறி பாடாலூர் வந்துள்ளார். அப்போது, வாலிபர் தொடர்ந்து பஸ் படிக்கட்டிலேயே தொடர்ந்து பயணித்து வந்துள்ளார். அவ்வப்போது, இதனை கண்டக்டர் பலமுறை கண்டித்து வந்துள்ளார் இதில் அன்பரசனுக்கும், கண்டக்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பயணி வைத்திருந்த ஆஷா பிரேம் பிளேடால் கண்டக்டரின் கழுத்தை அறுக்க முயன்றதில், கண்டக்டர் விஜய்-க்கு கழுத்தில் சிறு கீரல் ஏற்ட்டது.
பாடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். பயணி அன்பரசனை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து பாடாலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் அன்பரசனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்காவலுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பாடாலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.