Perambalur: Public demands action to provide treatment by a nephrologist at the government hospital two days a week!

பெரம்பலூரில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு பெரம்பலூர் மாவட்ட மக்கள் மட்டுமல்லாது திருச்சி மாவட்டம் துறையூர், சேலம் மாவட்டம் வீரகனூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூகையூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூர், திட்டக்குடி, மங்களூர், கொரக்கவாடி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். பெரம்பலூர் தண்ணீர் உப்பு நீராக உள்ளதாலும், உணவு பழக்க வழக்கங்களாலும், சீறுநீரகத்தில் கற்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். கடந்த ஆட்சியில் சிறுநீரக பிரிவில் டயாலிசிஸ் தொடங்கி செயல் பட்டு வரும் நிலையில், பெரம்பலூரில் சிறுநீரகம் தொடர்பாக சிகிச்சை அளிக்க தனிப்பிரிவும் இல்லை. அதனால், சிகிச்சை பெற திருச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு போதுமான சுகாதாரமின்ற மருத்துவ உள்ளதோடு, அதிகம் சிகிச்சைக் பெற வருவதால், ஏழை எளிய மக்களுக்கு இது பெரும் சிரமமாக உள்ளதால், வாரத்தில் இரண்டு நாட்களாவது பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிறுநீரக சிகிச்சை நிபுணர்கள் வந்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க நடடிவக்கை எடுப்பதுடன், தரமான மாத்திரைகளையும் தட்டுப்பாடின்றி வழங்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பொதுமக்களின் நீண்ட நாட்களின் கோரிக்கையாக அரசின் மருத்துவக் கல்லூரியை விரைவாக கொண்டு வர வேண்டும் எனவும், அதனால், பல உயர்தர சிகிச்சைகள் ஏழை எளிய மக்களுக்கு கிடைப்பதுடன், நோயிலிருந்து சிகிச்சை குணம் பெறுவார்கள், திருச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லும், அலைச்சலும், மனஉளைச்சலும் தீரும் என தெரிவித்துள்ளனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497