Perambalur: Public Grievance Redressal Camp Regarding Food Supply; Collector Announces Details!

பெரம்பலூர்: பொது விநியோகத்திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம், பெரம்பலூர் வட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், நெற்குணம் கிராமத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், குன்னம் வட்டம், வடக்கலூர் கிராமத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், பாடாலூர் (கிழக்கு) கிராமத்தில், ச.பா.தி. தனித்துணை ஆட்சியர் தலைமையிலும் 14.03.2026 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. மேற்படி முகாமில், பொதுமக்கள் கலந்துகொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.









kaalaimalar2@gmail.com |
9003770497