Perambalur: Public meetings, welfare assistance on the occasion of Chief Minister M.K. Stalin’s birthday; District DMK in-charge V. Jagatheesan’s statement!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் கீழ்க்கண்ட விபரப்படி பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றும், அதில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கே.என்.அருண்நேரு.எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் என்றும், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., வழிகாட்டுதல்படி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைக்கினங்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் நடைபெற உள்ளது என, இது குறித்து பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்
விடுத்துள்ள அறிக்கையாவது:

17.03.2025-ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் செட்டிக்குளத்தில், சிவாஜிகிருஷ்ணமூர்த்தியும், 18.03.2025-வேப்பூர் வடக்கு ஒன்றியம் – அகரம்சீகூரில், சிவாஜி கிருஷ்ணமூர்த்திய. 19.03.2025-வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் – சைதை.சாதிக். 25.03.2025-அரும்பாவூர் பேரூரில்-கரூர்.முரளி. 28.03.2025-பூலாம்பாடி பேரூர் -சேலம் சுஜாதா.29.03.2025-குரும்பலூர் பேரூரில், புதுக்கோட்டை விஜயா. 30.03.2025-பெரம்பலூர் ஒன்றியம்- கந்திலி கரிகாலன். 31.03.2025-ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம் – தோழர்.அருள்மொழி. 5.04.2025-பெரம்பலூர் நகரில் சுப.வீரபாண்டியன். 6.04.2025-வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம் – உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன். 7.04.2025-லெப்பைக்குடிக்காடு பேரூர் – கவிஞர்.நன்மாறன்.
25.04.2025-வேப்பூர் தெற்கு ஒன்றியம் – குன்னம்-திண்டுக்கல் ஐ.லியோனி, ஆகியோர் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொள்கின்றனர்.

பெரம்பலூர் நகரத்தில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது. நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, துணிமணிகள், சாப்பாடு வழங்குவது,பெரம்பலூர் ஒன்றியத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் தென்னங்கன்றுகள் வழங்கி, சலவைப்பெட்டி மற்றும் வேஷ்டி, சேலைகள் வழங்குவது. வேப்பூர் வடக்கு ஒன்றியத்தில் 200 பேருக்கு வேஷ்டி, சேலைகள், அரிசி வழங்குவது.வேப்பூர் தெற்கு ஒன்றியத்தில் பரவாய், குன்னம் ஆகிய இடங்களில் உள்ள முதியோர் இல்லங்களில் மதிய உணவு மற்றும் வேஷ்டி, சேலைகள் வழங்குவது.

வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் கை.களத்தூர், நூத்தப்பூர், வெங்கலம், அன்னமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் 200 பேருக்கு அரிசி மற்றும் வேஷ்டி, சேலைகள் வழங்குவது. வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம்- மண்வெட்டி , கடப்பாறை, தூய்மைப் பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலைகள், அரிசி வழங்குவது, பூலாம்பாடி பேரூரில், -தூய்மை பணியாளர்கள் 50 பேருக்கு துணிமணிகள், தலா 5 கிலோ அரிசி வழங்குவது. குரும்பலூர் பேரூரில் – 100 பேருக்கு வேஷ்டி, சேலைகள் வழங்குவது. அரும்பாவூர் பேரூரில்- அரிசி மற்றும் வேஷ்டி, சேலைகள் வழங்குவது. மாணவர் அணி – கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது. மகளிர் அணி சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட உள்ளது.

பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர் சிறப்பாக நடத்திட வேண்டும் என அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!