Perambalur: Public Relations Project Camp in Pudu Nadvalur: Welfare assistance worth Rs. 1.23 crore; distributed by the Collector.
பெரம்பலூர் மாவட்டம் புது நடுவலூர் கிராமத்தில் கலெக்டர் கிரேஸ் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. அதில், 192 பயனாளிகளுக்கு ரூ.1,23,02,756 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். முன்னதாக அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க அறிவுறுத்தினார். அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.