Perambalur: R. Tamilselvan Announced as AIADMK Candidate for the Constituency; Enters the Electoral Fray for the Fourth Time!

பெரம்பலூர் தனி சட்ட மன்ற தொகுதியின் அஇஅதிமுக-வின் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏவான ஆர்.தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூரைச் சேர்ந்த விவசாயி ராஜி – பொட்டு ஆகியோரின் தம்பதியினரின் மகன் தமிழ்ச்செல்வன். வயது 52. M.A., தமிழ் படித்துள்ளார், பிரியதர்ஷினி என்ற மனைவியும், தமிழ்யாழினி என்ற மகளும், தமிழ்பிரியன் என்ற மகனும் உள்ளனர்.
தற்போது அஇஅதிமுகவின் பெரம்பலூர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தமிழ்ச்செல்வன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ம.பிரபாகரனை விட அதிக வாக்குககள் பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 2016 ம் ஆண்டு தேர்தலில் தன்னை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் கலெக்டரும், சமூக சமத்துவ படையின் நிறுவனருமான பெரம்பலூரை சோந்த சிவகாமியை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். கடந்த 2021 ம் ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ம. பிரபாகரனிடம் தோல்வியை தழுவினார்.
தற்போது, பெரம்பலூர் தனி சட்ட மன்ற தொகுதிக்கு 4-வது முறையாக அஇஅதிமுக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உற்சாகத்துடன் தேர்தல் பணியாற்ற தயாராகி வருகின்றனர்.
பெரம்பலூர் தனித் தொகுதியில் அதிமுக Vs திமுக நேருக்கு நேர் போட்டியிடுவதால் இந்த தேர்தல் நல்ல டஃப் பைட்டாக இருக்கும் என கூறப்படுகிறது.










kaalaimalar2@gmail.com |
9003770497