Perambalur: Rehabilitation for those who changed their minds in liquor cases: Collector presents milch cows!

பெரம்பலூர் மாவட்டத்தில், மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கு கலெக்டர் கிரேஸ், போலீஸ் எஸ்.பி. ஆதர்ஷ் பசேரா ஆகியோர் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் மூலமாக, மறுவாழ்வு நிதியுதவியின் கீழ் கறவை மாடுகளை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வழங்கினர்.

மது குற்ற வழக்குகளில் ஈடுபட்டு மனம் திருந்தி வாழ்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் விதமாகவும், மீண்டும் மது குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்தடும் பொருட்டாகவும் நிரந்தர வருவாய் ஈட்டிடும் பொருட்டும், மனம் திருந்தி சமூகத்தில் நன்மதிப்புடன் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையிலும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் மூலமாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50,000 மறுவாழ்வு நிதி அளிக்கப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான மறுவாழ்வு நிதியாக ரூ.7,50,000 ஒதுக்கீடு செய்யப்பட்டதில், மது குற்ற செயல்களிலிருந்து விடுபட்டு மனம் திருந்திய 15 நபர்களுக்கு தலா ரூ.50,000/- மதிப்பீட்டில் காப்பீட்டுடன் கூடிய கறவை மாடுகள் வாங்கிட கால்நடை பராமரிப்புத்துறைக்கு கலெக்டரால் ஆணையிடப்பட்டது. அதனடிப்படையில் மது குற்ற வழக்குகளில் ஈடுபட்டு மனம் திருந்திய 13 நபர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.6.50லட்சம் மதிப்பிலான கறவை மாடுகளையும், கன்றுக் குட்டிகளும் வழங்கப்பட்டது.

மாவட்ட போதைப்பொருள் தடுப்புப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மு.பாலமுருகன், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் பகவத்சிங், துணை இயக்குநர் சங்கர நாராயணன், கலால் உதவி ஆணையர் (பொறுப்பு) சிவா, போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்கள், கால்நடைத்துறை உதவி மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!