Perambalur: Remove DMK flagpoles placed in public places! District in-charge V. Jagatheesan’s statement!
தி.மு.கழகத்தின் அறிவிப்பிற்கிணங்க, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள திமுக கொடிக் கம்பங்களை, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றியம், நகரம், பேரூர், வார்டு மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தங்களது பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்களிலும், பொது இடங்களிலும் வைத்துள்ள திமுக கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றிட வேண்டும் எனவும், அவ்வாறு அகற்றப்பட்ட கொடிக் கம்பங்களின் விவரங்களை மாவட்டக் கழகத்திற்கு தெரியப்படுத்திட வேண்டும் என்றும், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில், இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.