Perambalur: Republic Day celebrations; Collector hoisted the flag and distributed welfare assistance!
இந்தியத் திருநாட்டின் குடியரசு தின விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் இன்று காலை கலெக்டர் கிரேஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
போலீஸ் எஸ்.பி. ஆதர்ஷ் பசேரா, உள்ளிட்டோர் முன்னிலையில் வகித்தனர்.
கலெக்டர், போலீஸ் எஸ்.பி இருவரும் சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்களையும், தேசியக்கொடி நிறத்திலான பலுான்களையும் பறக்க விட்டனர், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். பின்னர், 190 பயனாளிகளுக்கு ரூ.1,74,09,430 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணிபுரிந்த 18 போலீசாருக்கு முதலமைச்சர் பதக்கங்களையும், 25 பேருக்கு நற்சான்றிதழ்களையும், சிறப்பாக பணிபுரிந்த 177 பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களையும், கலெக்டர் வழங்கினார்.
அணிவகுப்பு படையின் தளபதியாக ஏ.ஆர் இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டியன் தலைமையேற்று அணிவகுப்பை வழிநடத்தினார். முதலாம் படைப்பிரிவிற்கு ஏர்.ஆர். சப் – இன்ஸ்பெக்டர் என்.சந்திரபோஸ், 2ம் படைப்பிரிவிற்கு ஏர்.ஆர். சப் – இன்ஸ்பெக்டர் எ.சுகனேஸ்வரியும், 3ம் படைப்பிரிவிற்கு ஏர்.ஆர். சப் – இன்ஸ்பெக்டர் சீமானும், மேலும் ஊர்க்காவல் படை முதலாம் படைப்பிரிவிற்கு உதவி படைப்பிரிவு தளபதி ஆல்பர்ட்டும், 2ம் படைப்பிரிவிற்கு ஊர்க்காவல் படை தளபதி பொன்னுசாமியும் தலைமையேற்று வழி நடத்தினார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய்த் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் 54 பயனாளிகளுக்கு ரூ.39.51 லட்சம் மதிப்பிலும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு வருடாந்திர பராமரிப்பு மானியமாக ரூ.25,000-ம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை 02 பயனாளிகளுக்கு ரூ.2.17 லட்சம் மதிப்பிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.31 லட்சம் மதிப்பிலும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.6.55 லட்சம் மதிப்பிலும், தாட்கோ சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.22.11 லட்சம் மதிப்பிலும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் மதிப்பிலும், கூட்டுறவுத்துறை சார்பில் 57 பயனாளிகளுக்கு ரூ.53.36 லட்சம் மதிப்பிலும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 49 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.41 லட்சம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 190 பயனிகளுக்கு ரூ.1,74,09,430 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கவுதம புத்தர் சிறப்புக் குழந்தைகளுக்கான உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 360 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டினர். அனைத்து துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், நொச்சியம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டமும், பெரம்பலூர் மதனகோபாலசாமி கோவிலில் சமபந்தி விருந்தும் நடந்தது. அதில் கலெக்டர் கிரேஸ் கலந்து கொண்டார்.