Perambalur: Retired Headmaster Kamaraju appointed as permanent member of People’s Court!
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வில் இயங்கி வரும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் நிரந்தர உறுப்பினராக ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜு நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இயங்கி வரும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஒரு உறுப்பினர் பதவிக்கு மக்கள் சேவை பயன்பாட்டுத்துறையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த, பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.
உறுப்பினர் பதவிக்கு போக்குவரத்துத்துறை, தகவல் தொடர்புத் துறை, மின்சார வாரியம், காப்பீட்டு கழகம் மருத்துவத் துறை மற்றும் கல்வித் துறை போன்ற துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 62 வயதிற்குட்பட்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மக்கள் நீதிமன்றத்தில் நிரந்தர உறுப்பினராக பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் அரசு மேல்நிலை யில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற, துறைமங்களம் நேஷனல் ஐடிஐ பகுதியை சேர்ந்த காமராஜு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.