Perambalur: Robbers snatch 7.5 pound thali chain from a walking woman!
பெரம்பலூர் ரோவர் பின்புறம் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் பின்புறம் வசித்துவருபர் ரவிச்சந்திரன். இவரது மனைவி கோமதி (56). ஆசிரியரான இவர், பெரம்பலூர், வெங்கடேசபுரத்தில் உள்ள கோல்டன் கேட்ஸ் பள்ளியில் கோ – ஆர்டினரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி வேலைகளை முடித்து விட்டு, அங்காள பரமேஸ்வரி கோயில் அருகே தனது வீட்டிற்கு செல்ல நடந்து கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் மின்னலாய் வந்த 2 மர்ம நபர்கள் கோமதியின் கழுத்தில் இருந்து சுமார் 7.5 தாலிக்கொடியை பறித்தனர். அப்போது பைக்கை மற்றொருவன் ஓட்டி வர அதில் 3 பேரும் தப்பி மின்னலாய் மறைந்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதியில் உள்ள வீடுகளில் பதிவான சிசிடிவி மற்றும் செல்போன் சிக்னல்களை வைத்தும் கொள்ளையர்களை அடையாளம் பணியில் தீவிரமாக போலீசார் ஈடுபட்டுள்னர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.