Perambalur: Rye grains purchased from farmers are being sold in ration shops; Collector informs!

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட கம்புகள் (Bajra) குறைந்த விலையில் கூட்டுறவு சிறப்பு அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகிறது என கலெக்டர் விடுத்துள்ள கிரேஸ் பச்சாவ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்;

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட கம்பு தானியத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சிறப்பு அங்காடிகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யும் வகையில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

2024 25 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்புகளில் அனைத்து கூட்டுறவு விற்பனை சங்கங்களும் வேளாண் விளை பொருட்கள் பதனிடும் சங்கங்களாக மேம்படுத்தப்படும் எனவும், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் சிறுதானியங்கள் கொள்முதல் செய்து சந்தைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து விற்பனை சங்கங்களிலும் தங்கள் மாவட்டத்தில் விளையும் சிறுதானியத்தை கொள்முதல் செய்து அதன் மதிப்பினை கூட்டி (சுத்தம் செய்தல், சுத்தமிடல்) அவற்றை சந்தைப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில், கூட்டுறவு சங்க பணியாளர்கள் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!