Perambalur: S.S. Sivashankar will contest for the third time as DMK candidate in Kunnam constituency!

தமிழ்நாட்டின் போக்குவரத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த சா.சி. சிவசங்கர் (57). தற்போது 2026 சட்ட மன்ற தேர்தலுக்காக அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பி.இ, எம்.பி.ஏ பட்டம் பெற்ற சிவசங்கர் நகைச்சுவையுடன் சாதுர்த்தியமாக டைமிங்கில் பதிலளிக்கும் திறமையும் கொண்டவர். இவரது மனைவி காயத்ரி தேவி, டாக்டராக உள்ளார். மகன் சிவசரண் டாக்டராகஉள்ளார். மற்றொரு மகன் சிவசூர்யா. சிவசங்கர் விவசாயம் தொழில் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். அரியலூரில் வசித்து வருகிறார்.
திமுக கட்சியில், ஒன்றிய செயலாளர், அரியலூர் மாவட்ட செயலாளர், பெரம்பலூர் மாவட்ட தடகள சங்க தலைவர், 1996 – 2001 பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராகவும், 2001 – 2006 ல் அரியலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராகவும், 2006 – 2011 ல் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராகவும், 2011 – 2016 மற்றும் 2021 – 2026 ல் குன்னம் சட்டமன்ற உறுப்பினராகவும், 7.5.2021 – 29-3-2022 வரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், 31.03.2022 – 2026 வரை போக்குவரத்து துறை அமைச்சராகவும், 28.4.2025 – 2026 வரை போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சராகவும் பதவிகள் வகித்து வந்துள்ளார்.
மக்களோடு என் அனுபவங்கள், சோழன் ராஜா ப்ராப்தி, தோழர் சோழன் என்ற நூல்களை எழுதி உள்ளார். தற்போது 3வது முறையாக குன்னம் தொகுதியில் போட்டியிடுகிறார் சிவசங்கர்.
தமிழக வரலாற்றில் ஓட்டை உடைசலாக இருந்த டவுன் பஸ்களை தமிழ்நாடு முழுவதும் தரம் உயர்த்தி நவீன மின்னும் பேருந்துகளாக மாற்றினார். இவரை தற்போது குன்னம் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் திமுக கட்சியினர் ஆர்வமுடன் பணியாற்றி வருகின்றனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497