Perambalur: SC, ST categories have the opportunity to start businesses in Erode and Tiruppur Thatco Industrial Estates; Collector’s information!
தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்டம், ஈங்கூர் மற்றும் திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் தொழிற்பேட்டைகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தொழிற்கூடங்களை குத்தகை மற்றும் வாடகை முறையில் வழங்க திட்டமிட்டுள்ளது.
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சரால், 2024-25- ஆம் ஆண்டு சட்டப்பேரவை புதிய அறிவிப்பில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் 2 தொழிற்பேட்டைகளிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி புனரமைக்கப்படும் என அறிவித்தார். தொழிற்பேட்டைகளில்லு புனரமைப்புப்பணிகள் தொடங்கப்பட்டு 3 மாத காலத்தில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
இத்திட்டத்தில் குறு ,சிறு மற்றும் பெரு தொழில் முனைவோரை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் வகையில் வாடகை மற்றும் குத்தகை முறையில் காலிமனையாகவோ, மறு சீரமைக்கப்பட்ட தொழிற்கூடங்களாகவோ, ஒற்றைமாடி / பலமாடி தொழிற்கூடங்களாவோ அமைத்து அவர்களின் தேவைக்கேற்ப குறுகிய / நீண்டகால குத்தகை அல்லது வாடகை முறையில் வழங்க அரசு தற்போது முன் வந்துள்ளது. இத்திட்டத்தில் பயன் பெற விண்ணப்பத்துடன் விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்கள் தாங்கள் தொழில் செய்வதற்கு மேற்கண்ட ஏதேனும் முறையில் தொழிற்கூடங்களை பெற விண்ணப்பிக்கும் முன்பாக தள பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஈங்கூர் தொழிற்பேட்டை மற்றும் முதலிபாளையம் தொழிற்பேட்டையில் தள பார்வையிடலாம்.
மேலும் ஈங்கூர் தொழிற்பேட்டை மற்றும் முதலிபாளையம் தொழிற்பேட்டைக்கு செல்ல தொடர்புடைய மாவட்டத்திற்கு சென்றால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட தாட்கோ துறையின் சார்பாக வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் முனைவோர்கள் தளத்தினை பார்வையிட்ட பிறகு அலுவலக தேவை படிவத்தின் மூலம் அவர்களின் விருப்பத்தை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பங்கு பெற விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் https://forms.gle/fZPDgyWUToAAUobt7 என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு 91502 77723 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.