Perambalur: Siruvachur Almighty School thanks MRF for providing Rs. 7 lakhs!
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளிக்கு எம்.ஆர்.எப் நிறுவனம் தனது சி.எஸ்.ஆர். நிதி மூலம் ரூ. 7 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு நிதியுதவி செய்து வரண்டாவில் கிரில் கேட் கட்டமைப்பு பணிக்கு உதவியதது. அதற்கு, ஆல்மைட்டி பள்ளி மாணவர்கள் மற்றும் நிர்வாகம் சார்பில், எம்.ஆர்.எப். நிறுவனத்திற்கும், வழங்கிய அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா பள்ளி சேர்மன் சேர்மன் முனைவர் ஆ. ராம்குமார் தலைமையில் நடந்தது.
துணை சேர்மன் மோகனசுந்தரம் முன்னிலை வைகித்தார்.
எம்.ஆர்.எப் நிறுவனத்தின் பொது மேலாளர் .நாதன் சிறப்புரையாற்றினார். பள்ளி மாணவர்களின் கட்டுப்பாடு , ஒழுக்கம் குறித்து தம் கம்பெனி ஊழியர்கள் சிறப்பாக கூறியதால் உங்களுக்கு எங்கள் நிறுவனம் உதவ முன்வந்தது என பேசினார்.
துணை பொது மேலாளர் அஜி செரியன் பள்ளியில் மாணவர்களுக்கு நிர்வாகம் செய்திருக்கும் பல்வேறு வசதிகள் குறித்து பாராட்டு தெரிவித்தார். விழாவில் மாணவ மாணவியர்களின் பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய மாணவர்களையும், ஆசிரியர்களையும் பாராட்டினர். விழாவில் எம்ஆர்எப் கம்பெனியின் சி.எஸ்.ஓ. ராஜி மற்றும் பள்ளியின் முதல்வர்கள் சாரதா, சந்திரோதயம், துணை முதல்வர் ராஜேந்திரன் ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.