Perambalur: Special Panguni month puja at Sangupettai Sri Muthu Mariamman Temple!
பெரம்பலூர் சங்குபேட்டை ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பங்குனி மாத சிறப்பு பூஜை நடந்தது. பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகமும் நடந்தது. வண்ண மலர்கள், எலுமிச்சை மாலைகளால் அலங்கரிக்பட்ட சாமியை திரளான பக்தர்கள் வழிபட்டு சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை போட்டு, விரதம் இருந்து அக்கினி சட்டி எடுத்தும் வழிபட்டனர் . பூஜைகளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூசாரி வெ.நீதிதேவன், ஊர் பொதுமக்கள் மற்றும் மாயம்மா குழுவினர் செய்திருந்தனர்.