Perambalur: Sri Maragadavalli Sametha Sri Madanagopala Swamy Temple
பெரம்பலூர் நகரில் உள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான 7ம் நாள் இன்று திருக்கல்யாணம் உற்சவம் வெகுவிமரிசையாக நடந்தது. முன்னதாக, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மாதனகோபால சுவாமி எழுந்தருளி யாகசாலைகள் அமைத்து பட்டாச்சாரியார்களின் வேதம் மந்திரம் முழங்க திருமண வைபவங்கள் நடத்தி வைக்கப்பட்டு இரவு (7:00 – 8:00) மணி அளவில் மாங்கல்ய தானம் எனும் திருமண வைபவம் பெருமாளுக்கு பக்தர்கள் புடை சூழ கோவிந்தா முழக்கமிட மங்கள வாத்தியம் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவிற்கான உபயத்தை சென்னையை சேர்ந்த மருத்துவர் பாலாஜி குடும்பத்தினர் செய்திருந்தனர். செயல் அலுவலர் என்.ரவிச்சந்திரன், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், குமார், பூக்கடை சரவணன், உட்பட ஏராளமான நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு திருக்கல்யாணம் கண்டு பெருமாள் அருளை பெற்றனர். பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியார் மற்றும் சென்னை சுதர்சன் பட்டாச்சாரியார் செய்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து இரவு பெருமாள் பூ பல்லக்கில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் உலா வந்து திருக்கோயிலை அடைந்தார்.