Perambalur: Strong winds and thunder and lightning in many places; Crops including maize damaged! Trees and banners fell!!
பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று மாலை பலத்த காற்று வீசியது. அதில் புழுதி, குப்பைகள், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் காற்றில் பறந்து மிதந்து சென்றன. விளம்பர பேனர்கள் ஆங்காங்கே சாலையில் விழுந்தன. புழுதி தாக்குதலால் இரு சக்கர வாகன ஓட்டிகள் திணறினர். பச்சைமலைத் தொடர் உள்ளிட்ட பெரம்பலூர் நகரின் பலப்பகுதிகளிலும், பலத்த மழை காற்றுடன் கோடை மழை பெய்தது. சில இடி -மின்னல் ஏற்பட்டது. கோடையில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த மக்காச்சோளம் உள்ளிட்ட பல பயிர்கள் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தலைபாரத்தால் வீழ்ந்தன. சில இடங்களில், முருங்கை, வைணாரை, உள்ளிட்ட மரங்கள் முறிந்து வீழ்ந்தன. தாழ்வான பகுதிகளில் தொங்கி கொண்டிருந்த மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியால் தீப்பொறிகள் பறந்து குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்தியது. பல இடங்களில் சில நாழிகைகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கோடையால் புழுக்கத்தாலும், வெப்பதாலும் அவதிப்பட்ட மக்கள் மழையால் ஏற்பட்ட குளிர்ச்சியால் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.