Perambalur: A student drowned while bathing in the lake with friends!
பெரம்பலூர் அருகே உள்ள பேரளி கிராமத்தை சேர்ந்தவர் மாயன் மகன் கார்த்திக் (15), 9ம் வகுப்பு படித்து வந்தார். இன்று 12ம் தேர்வு நடந்ததால், காலை வகுப்புகள் இல்லை. மதியம் பள்ளிக்கு செல்வதற்காக, மாணவன் கார்த்திக், பேரளி – ஒதியம் சாலையில் உள்ள ஊத்தாங்கால் ஏரிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றான். நீச்சல் தெரியாத மாணவன் கார்த்திக் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீர் மூழ்க தொடங்கினான். அங்கிருந்த அவனது நண்ர்கள் காப்பாற்ற முயன்றும், அபய குரல் எழுப்பியும், அவனை காப்பற்ற முடியவில்லை. தண்ணீரில் மூழ்கிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து தகவல் அறிந்த அவனது உறவினர்கள் அவனை மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். மேலும், இது குறித்து அறிந்த மருவத்தூர் போலீசார், மாணவனின் உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உடற்கூறு ஆய்வும் நடத்தினர். வழக்குப் பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.