Perambalur: Student Tour Van Collides with Lorry; 14 Injured!

பெரம்பலூர் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி மாணவர்கள் சென்ற சுற்றுலா வேன் விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் உட்பட 14 பேர் காயமடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் திருத்தணி தனியார் பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 பயின்ற மாணவர்கள் தேர்வு முடிந்த நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். பள்ளி ஆசிரியர்களுடன் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றுலா சென்ற இவர்களது வேன் நேற்று சுமார் இரவு 9 மணி அளவில் திருத்தணியில் இருந்து புறப்பட்டு, இன்று அதிகாலை சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி பிரிவு பாதை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற லாரியின் பின்பகுதியில் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் கவிழ்ந்த வாகனத்தில் இருந்து காயமடைந்த, வேன் ஓட்டுநர் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை சேர்ந்த வெங்கட் (29) என்பவருக்கும் பள்ளி மாணவர்களில் திருத்தணியை சேர்ந்த பாலமுருகன்(18) என்பவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும், இவர்களுடன் பயணம் செய்த 12 மாணவர்கள் லேசான காயங்களுடன் அலறிக் கொண்டிருந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவ்விபத்தால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சாலையில் கவிழ்நத வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!