Perambalur sugar mill farmers owe Rs. Resolution at the farmers meeting to provide Rs 35 crore immediately!

பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் சின்னாறில் இன்று தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:

விவசாயிகள் நலனுக்கு போராடியவரும், தமிழக விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் மறைந்த ஆண்டிக்குரும்பலூர் மாணிகத்திற்கு, மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் திருத்தச்சட்டங்களை திரும்ப பெறக் கோரி கடந்த 5 மாதமாக டெல்லியில் போராடி மரணமடைந்த 200க்கு மேற்பட்ட விவசாயிகளுக்கும் இந்த கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

2020-2021ம் ஆண்டுக்கு வெட்டிய கரும்புக்கு பிப்ரவரி 1ம்தேதி முதல் விவசாயிகளுக்கு தரவேண்டிய பாக்கி சுமார் ரூ. 35கோடியை உடனே வழங்க வழங்கவேண்டும் என இந்த கூட்டம் வலியுறுத்துகிறது. மத்திய அரசின் சர்க்கரை விற்பனை கட்டுப்பாட்டால் பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் சுமார் 2லட்சம் மூட்டைகள் தேங்கியுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பணம் கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக தெரிகிறது. சர்க்கரை மீதான விற்பனை கட்டுப்பாடுகளை தளர்த்தி உடனே சர்க்கரையை விற்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என இந்தகூட்டம் வலியுறுத்துகிறது.

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இருந்து மற்ற ஆலைகளுக்கு மொலாசஸ் விற்றதில் வரவேண்டிய பாக்கி சுமார் ரூ. 11கோடியை உடனே வழங்க தமிழ்நாடு சர்க்கரை கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தகூட்டம் வலியுறுத்துகிறது. விவசாயிகள் உற்பத்தி பாதிப்பாலும், கடன்சுமையாலும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மத்திய அரசு உரங்கள் விலையை 58% உயர்த்தி விவசாயிகளுக்கு சொல்லொணா துயரத்தை ஏறப்படுத்தியிருப்பதை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. உரவிலை உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.

பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கும், இந்த ஆலை மூலமாக மற்ற ஆலைகளுக்கு அனுப்பிய வகையிலும் வாகன வாடகை கடந்த மர்ச்சு 1ம் தேதி முதல் பாக்கி உள்ளது. அவற்றை உடனே வழங்க வேண்டும் என இந்தகூட்டம் வலியுறுத்துகிறது. நடப்பு கரும்பு பருவத்தில் வெட்டுக் கூலி ரூ. 1000தை தாண்டுவதால் கரும்பு விவசாயிகள் மிகவும் பதிக்கப்படுள்ளனர். அரவை துவங்கும் முன்பாகவே முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்தி ஆலை துவங்கும் நாள்முதல் அரவை முடியும் வரை ஒரே அளவில் வெட்டுக்கூலியை நிர்ணயம் செய்து ஒப்பந்தம் போடவேண்டும் எனவும், ஆலை நிர்வாகமே வெட்டு ஆட்களுக்கு விபத்துகால இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் எனவும் இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை முடிந்தவுடன் வெட்டப்படாமல் இருக்கும் மீதி கரும்பை நமது ஆலை மூலமாகவே அருகில் உள்ள விவி சுகர்மில் மற்றும் சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்ப வேண்டும் என இந்தகூட்டம் வலியுறுத்துகிறது. அனைத்து கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் மு. ஞானமூர்த்தி தலைமையில் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பிரவரி 1முதல் 7 ம் தேதிவரை வெட்டிய கரும்புக்கு பாக்கி தொகை ரூ. 6 கோடியை அனுப்புவதாக தெரிவித்தனர். மீதி தொகையை அரசு வங்கியில் 2லட்சம் குவிண்டால் சர்க்கரை இருப்பை காண்பித்து பணம் பெற்று விவசாயிகள் பாக்கியை தருவதாக அதிகாரிகள் தெறிவித்தனர்.

கூட்டத்தில் பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் சீனிவாசன்,ராஜீவ் காந்தி கரும்பு விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் , காங்கிரஸ் கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ஆ.பெருமாள்,பங்குத்தாரர்கள் சங்க தலைவர் டிகே. ராமலிங்கம், செயலாளர் நடராஜன், செந்துறை ஒன்றிய வி. தொ. அணி அமைப்பாளர் புலேந்திரன், துணை அமைப்பாளர் கோவிந்தசாமி, செந்துறை ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் என். பச்சமுத்து, நல்லறிக்கை செல்வராசு, பாலகிஷ்ணன், பழமலை நாதபும் கரும்பாயிரம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!