Perambalur: Swimming training at the district sports Ground; Collector’s announcement!

model
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நீச்சல்குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும், நீச்சல் வீரர்களின் தினசரி பயிற்சிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீச்சல் குளத்தில் நீந்த கற்றுக்கொள் திட்டத்தின் கீழ் 2025-ஆம் ஆண்டிற்கான சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.
இந்தப் பயிற்சிமுகாம் 12 நாட்களுக்கு தொடர்ந்து நடத்தப்படவுள்ளது. முதல் வகுப்பு 01.04.2025முதல் 13.04.2025 முடிய, இரண்டாவது வகுப்பு 15.04.2025 முதல் 27.04.2025 முடிய, மூன்றாவது வகுப்பு 29.04.2025 முதல் 11.05.2025 முடிய, நான்காவது வகுப்பு 13.05.2025 முதல் 25.05.202 5முடிய, ஐந்தாவது வகுப்பு 27.05.2025 முதல் 08.06.2025 முடிய நடைபெறவுள்ளது. இப்பயிற்சி முகாம் பயிற்சி காலை நேரங்களில் 6.00 மணி முதல் 7.00 மணி வரை, 7.15 மணி முதல் 8.15 மணி வரை மற்றும் 8.30 முதல் 9.30 வரையும், மாலை நேரங்களில் 3.30 மணி முதல் 4.30 மணி வரை, 4.30 மணி முதல் 5.30 மணி வரை மற்றும் 5.30 மணி முதல் 6.30 மணி வரையும் நடைபெறும். பயிற்சி கட்டணம் ரூ.1,500 + ஜி.எஸ்.டி 18 சதவீதம் ஆகும். பயிற்சி முகாமில் கலந்து கொண்டு நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த நீச்சல் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் மாவட்ட விளையாட்டரங்க நீச்சல் குள வளாகம் – பெரம்பலூர் என்ற முகவரியில் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 04328-299266 என்ற தொலைபேசி எண், 74017 03516 என்ற அலைபேசி எண் அல்லது நீச்சல் பயிற்றுநர் (88704 39645) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.