Perambalur: The 10th anniversary of Almighty Vidyalaya Public School! It was held under the leadership of Chairman A. Ramkumar!
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியின் 10-ம் ஆண்டு , ஆண்டு விழா, பள்ளியின் சேர்மன் ஆ.ராம்குமார் தலைமையில் நடந்தது. பள்ளி முதல்வர் சாரதா ஆண்டறிக்கை வாசித்தார்.
முதல் மூன்று இடங்கள் பெற்ற கே ஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஷீல்டுகளை சேர்மன் ராம்குமார் வழங்கினார். துணை சேர்மன் மோகனசுந்தரம், செயலாளர் சிவகுமார் ஆகியோர் 100 சதவீதம் பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களை பாராட்டி சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினர்.
மேவரிக் பவுண்டேஷன் உரிமையாளர் கார்த்திக் சிறப்புரையாற்றினார். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் ஆடல், பாடலுடன் கூடிய கலை நிகழ்ச்சிகள், நாடகம் , சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பள்ளி மாணவர்கள் அலங்கரிக்கப்பட்ட வண்ண விளக்குகளின் ஒளியில் நிகழ்த்தி காட்டினர். பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பொங்கல், சிற்றுண்டி விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது. முதல்வர் சந்திரோதயம் வரவேற்றார். துணை முதல்வர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.