Perambalur: The Collector donated computers worth Rs. 4.17 lakhs from his discretionary funds to the Veppandhattai Government College!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கணினி அறிவியல் பயலும் மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூபாய் 4.17 லட்சம் மதிப்பீட்டிலான 10 கணினிகளை கல்லூரியின் முதல்வர் மற்றும் மாணவ, மாணவியர்களிடம் வழங்கினார்.
வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2014-2015 கல்வி ஆண்டில் துவக்கப்பட்ட கல்லூரியானது 5 இளங்கலை வகுப்புகளுடன் துவங்கப்பட்டு, தற்போது 10 இளங்கலை வகுப்புகள் மற்றும் 2 முதுகலை வகுப்புகளுடன் 1,680 மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இக்கல்லூரி ஆய்வகத்தில் 20 கம்பியூட்டர்கள் மட்டுமே உள்ளதாகவும், மாணவ மற்றும் மாணவியர்களுக்கு கணினி வழி கற்று கொடுப்பதற்காக கூடுதலான கணினிகள் மற்றும் பிளாஷ்டிக் நாற்காலி தேவைப்படுவதாக மாணவர்கள் கோரிக்கை அளித்தன், பேரில், 10 கணிணிகள் ரூ.4,73,145 மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சேகர், பேராசிரியர் ராமராஜ், கல்லூரி மாணவ, மாணவியர்கள் பலர் உடனிருந்தனர்.