Perambalur: The police laid a net on the boy who snatched the gold bangle from the girl by saying words of desire!
பெரம்பலூர் அருகே காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி, 16 வயது பள்ளி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு, ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கச் சங்கிலி வாங்கிக் கொண்டு மோசடி செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்காமல் மகளிர் போலீசார் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது பள்ளி மாணவி. தந்தையை இழந்த இந்த பள்ளி மாணவி பெரம்பலூர் அருகே உள்ள ஒரு கிராமத்திலுள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி, அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், துறையூர் அருகே உள்ள தனது சொந்த கிராமத்தில் பள்ளி ஆசிரியரான தனது தாயுடன் தங்கி இருந்த போது, தொட்டியம் அருகே உள்ள கணேசபுரம் கிராமத்தை சேர்ந்த கார்த்தி-செல்வி தம்பதியினரின் மகன் கவிபாலா (20), என்பவர் நண்பராக அறிமுகமாகியுள்ளான்.
இதனைத் தொடர்ந்து அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்த கவிபாலா, அந்த பள்ளிச் சிறுமியிடம் உன்னை காதலிக்கிறேன் என்றும், திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் ஆசை வார்த்தைகளை கூறி, நம்ப வைத்து தனது பைக்கில் அந்தச் பள்ளிச் சிறுமியை அழைத்து கொண்டு ஊர் சுற்றியுள்ளான்.தந்தையை இழந்து தவித்த அந்த 16வயது பள்ளிச் சிறுமிக்கு ஆண் ஒருவரின் அன்பும், அரவணைப்பும், பேச்சும் சற்று ஆறுதலானதால், அவனுடனான நட்பை காதலாக ஏற்றுக்கொண்டு அந்த சிறுமி பழகி வந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த சேட்டை வாலிபர் கவிபாலா தனது பொருளாதார தேவையை பூர்த்தி செய்து கொள்ள அவ்வப்போது சிறுமியிடருமிருந்து சிறுக, சிறுக பணம் பறித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், ஸ்பெஷல் கிளாஸ் என்று கூறி வீட்டை விட்டு வெளியே வந்த சிறுமியிடம் கழுத்தில் அணிந்திருந்த ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 20 கிராம் தங்க சங்கிலியை கழட்டிக் கொடு என கேட்டு, வாங்கிய கவிபாலா வீட்டில் இன்னும் ஏதேனும் நகை இருந்தால் எடுத்துவா என சிறுமிக்கு நெருக்கடி கொடுத்துள்ளான். இதனால் சந்தேகம் அடைந்து சுதாரித்துக் கொண்ட சிறுமி நடந்தவற்றை, தனது அம்மாவிடமும், பெரியம்மாவிடமும் தெரிவித்து கண் கலங்கி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய்மார்கள் அந்த சேட்டை வாலிபனை செல்போனில் தொடர்பு கொண்டு தம்பி நாங்கள் கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து சம்பாதிச்ச பணத்துல வாங்கின முதல் தங்க நகை பா, அத தயவு செஞ்சு திருப்பி கொடுத்துடுப்பா என கெஞ்சி கேட்ட தாய்மார்களுக்கு இன்று வரை ஏமாற்றம் மட்டுமே மிஞ்சி வருகிறது.
மேலும், நகையை திருப்பிக் கொடு தம்பி என செல்போனில் தொடர்பு கொண்டால், வாய்க்கு வந்தபடி தகாத வார்த்தையால் பேசுவதோடு மிரட்டல் விடுப்பதாகவும் வேதனை அடைந்த சிறுமியின் தாய்மார்கள் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசை அணுகி சிறுமி ஏமாற்றப்பட்டதை புகாராக தெரிவித்து தங்க நகையை மீட்டுத் தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
புகார் தெரிவித்து 6 மாதங்கள் ஆகியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத அனைத்து மகளிர் போலீஸ் இன்பெக்டர் நீங்கள் மகளை ஒழுக்கத்துடன் வளர்க்காமல், பொறுப்பில்லாமல் ஊதாரித்தனமாக வளர்த்து விட்டு ஏமாந்து விட்டோம் நடவடிக்கை எடுங்கள் என்று இங்கு வந்து ஏன் எங்களை தொந்தரவு செய்கிறீர்கள்? நாங்கள் என்ன செய்வது? போய் வேலையை பாருங்கள் என விரட்டி அடிப்பதாக குற்றச்சாட்டை முன் வைப்பதோடு, அந்த ஏழை மூதாட்டியும், 16 வயது பள்ளி சிறுமியும் கவிபாலனிடமிருந்து தங்க நகையை மீட்க என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதனை பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி கவனத்தில் கொண்டு, சிறுமியை ஏமாற்றிய அந்த சேட்டை வாலிபன் கவிபாலாவிடமிருந்து தங்க நகையை மீட்டுத்தருவதோடு, உரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது. காதலிப்பதாக கூறிய ஆசை வார்த்தைகளை கூறிய வாலிபனை நம்பி, சிறுமிக்கு அணிவித்து இருந்த தங்க சங்கிலியை பறிகொடுத்த பள்ளி சிறுமிக்கு, அந்த சேட்டை வாலிபர் பாலியல் ரீதியாகவும் தொந்தரவு கொடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர்.