Perambalur: Public scolds youth who tried to break into house and steal!
பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் இவரது மனைவி ரேணுகா (55) இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றிருந்தார். இந்த நிலையில் வீட்டு கதவின் பூட்டை வாலிபர் ஒருவர் உடைப்பதை அப்பகுதி பார்த்தனர். இதனையடுத்து அவர் ஓட முயற்சித்த போது சந்தேகமடைந்த பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். ஆனால், அந்த வாலிபர் பதில் ஏதும் கூறாமல் மவுனம் சாதித்தார். இதனால் அவர் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து திருட முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். பின்னர். பாடாலூர் போலீசில் ஒப்படைத்தனர். காயமடைந்த வாலிபரை போலீசார் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பெயர், ஊர்களை மாற்றி மாற்றி கூறியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.