Perambalur: The Three Great Festivals of the Yadava greats; Gokula Makkal Katchi State Secretary Amman Muthaiah invites!
பெரம்பலூர் ஸ்ரீ முத்தையா கல்வி அறக்கட்டளை சார்பில் 3-வது ஆண்டு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, பெரம்பலூர் மாவட்ட யாதவர்களின் 3-வது ஆண்டு குடும்ப விழா, கோகுல மக்கள் கட்சியின் 12-வது அன்று தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா பெரம்பலூரில் உள்ள கர்ணம் சுப்பிரமணியம் திருமண மஹால் நாளை பிப்.16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. விழாவிற்கு கோகுல மக்கள் கட்சியின் மாநில செயலாளரும், ஸ்ரீ அம்மன் பேங்கர்ஸ் குழுமத்தின் நிறுவனமான முத்தையா தலைமை வகிக்கிறார்.
மாவட்ட செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகிக்கிறார். விழாவில் கோகுல மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சேகர் யாதவ் விழாவை தொடங்கி வைத்து எழுச்சி பேருரை ஆற்றுகிறார்.
விழாவில் மெகா டிவி புகழ் திரைப்பட நடிகரும் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஆதவன், மாநில தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ஜெயபிரகாஷ், திரைப்பட நடிகை ரஜினி நிவேதிதா, மத்திய கிழக்கு மண்டல செயலாளர் அம்மன் குழுமத்தை சேர்ந்த முருகன் ஆகியோர் சிறப்பு ஆற்றுகின்றனர். விழாவில் 2023 மற்றும் 2024 ஆண்டில் 10-ஆம் வகுப்பு, 12 – ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்றோர்களுக்கு கல்வி ஊக்கத் தொகைகளை மாநில நிறுவனத் தலைவர் வழங்குகிறார். விழாவில் சி முத்தையா கல்வி அறக்கட்டளையை நிர்வாகிகள் செந்தில்குமார் ஜீவானந்தம் செந்தில்குமார், மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள்,வேப்பூர் பெரம்பலூர் ஆலத்தூர் வெப்பந்தட்டை ஒன்றியங்களில் பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். முடிவில் மாவட்ட பொருளாளர் முக்கடல் ராஜ்மோகன் நன்றி கூறுகிறார்.
முன்னதாக காலை 9.45 மணி அளவில் மாநிலத் தலைவர் சேகர் யாதவருக்கு துறைமங்கலம் 4 ரோடு சந்திப்பு பகுதியில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியிலும் அதனைத் தொடர்ந்து கர்ணம் சுப்பிரமணியம் மஹாலில் நடைபெறும் முப்பெரும் விழாவிலும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த யாதவ பெருமக்கள் த முப்பெரும் விழா கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாநில செயலாளர் குழுமத்தின் நிறுவன தலைவருமான அம்மன் முத்தையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.