Perambalur: Tomorrow, a public meeting will be held on behalf of the DMK district student Wing to commemorate the Language War Martyrs’ Day!
பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்- மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக துணை பொதுச் செயலாளர் –
மேனாள் மத்திய அமைச்சர் ஆ. இராசா அறிவுறுத்தலின் படி, பெரம்பலூர் மாவட்ட மாணவரணி சார்பில், 25.01.2025(சனிக்கிழமை) மாலை 5.00 மணியளவில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரடித் திடலில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல் தலைமை வகிக்கிறார் .மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் இராகவி ரவிக்குமார் வரவேற்புரையாற்றுகிறார். மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் முன்னிலை வகிக்கிறார். இந்த கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்- மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் வி.பி.இராஜன் – தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இளையபெருமாள், கே.என்.அருன்நேரு.எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏ.கே.அருண் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பா.ரினோபாஸ்டின் நன்றியுரையாற்றுகின்றார். இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் ,மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,மாணவர்கள், கட்சித்தோழர்கள்,பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம், என தெரிவித்துள்ளனர்.