Perambalur: Training for the main examination for Adi Dravidian and tribal students who have passed the Group 1- 2025 primary examination; Collector information!
தாட்கோ முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னனி தேர்வு பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்1- 2025 முதல்நிலை தேர்வில் ( Preliminary Examination) தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு முதன்மைத் தேர்விற்கு (Mains Examinations) பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் சேர தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்1- 2025 முதல்நிலை தேர்வில் (Preliminary Examination) தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மாணாக்கர்கள் தாங்கள் விரும்பும் பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்து பயிற்சி பெறலாம். பயிற்சி கட்டணம் மற்றும் விடுதியில் தங்கி பயிலுவதற்கான விடுதி கட்டணம் தாட்கோவால் ஏற்கப்படும்.
இப்பயிற்சியில் சேர்ந்து பயில www.tahdco.com என்கிற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம், மேலும் விவரங்களுக்கு 04328 – 276317 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது பெரம்பலூர், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயனடையுமாறு கலெக்டர் ந.மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்