Perambalur: Videographer and editing training for Adi Dravidian-Tribal youth; Collector informs!
.webp)
தாட்கோ சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Certification in Videographer and video Editing) பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியை பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளும், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 18 முதல் 30 வயது வரை உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பயிற்சி 3 மாதங்கள் நடைபெறும்.
இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சியை பெற www.tahdco.com இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04328 – 276317 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது பெரம்பலூர், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயனடையுமாறு கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497