Perambalur: Training to participate in JEE Mains exam in Chennai; Collector information!
தாட்கோ மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இணைந்து எஸ்.சி. எஸ்.டி உள்பட பிற வகுப்பினர் மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வில் JEE Mains கலந்துக் கொள்ள பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியினை பெற 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஸ்.சி. எஸ்.டி-யை சார்ந்த மாணவர்கள் 65 சதவீதமும் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.4 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சியானது மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி பெற www.tahdco.com இணையதளத்தில் பதிவு செய்யவும். மேலும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் சென்னை மாவட்த்தில் உள்ள மணலி, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கி பயிலவும், உணவு மற்றும் தங்கும் இடத்திற்குக்கான கட்டணத்தொகையும், 11 மாதங்களுக்கு தங்கி பயில பயிற்சிக்கான தொகையினை ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும், கடந்த ஆண்டில் 30 மாணவர்கள் தங்கி பயின்று அதில் 26 மாணவர்கள் தேர்ச்சி பெற்று IIT, NIT போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேர தகுதி பெற்றுள்ளார்கள். மேலும் இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு 94450 29470 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.