Perambalur: Trying to give the revenue department strap on government land illegally: complaint by VCK
பெரம்பலூர் அருகே நத்தம் புறம்போக்கு நிலத்தை ஏழை மக்களுக்கு வழங்காமல், பணத்திற்காக செல்வந்தற்களுக்கு வருவாய் துறையினர் பட்டா போட்டு கொடுக்க ஆர்வம் காட்டுவதாக விசிக வேப்பந்தட்டை ஒன்றிய அமைப்பாளர் வே. வெற்றிமாறன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் தெரிவித்தார்.
அந்த மனுவின் விவரம்:
வெங்கலம் கிராமத்தில், மேற்குப் பகுதியில் சர்வே எண்: 161 – 26 -ல் அரசுக்கு சொந்தமான 44 செண்ட் நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல முறை கேட்டும் இது வரை வழங்க முன்வரவில்லை. ஆனால், அந்த இடத்தை வெங்கலம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாசியர் ஆகியோர் தொண்டைமாந்துறையை சேர்ந்த முன்னாள் தலைவர் நவாப்ஜான் என்பவருக்கு முறைகேடாக பணம் பெறுவதற்காக பட்டா கொடுப்பதற்கான பூர்வாங்க பணிகளை செய்து வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்துவதுடன், விசாரணை நடத்தி ஏழைகளுக்கு நிலத்தை பங்கிட்டு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
வருவாய் துறையினர் முறைகேடாக பணம் பெற்றுக் கொண்டு அந்த இடத்திற்கு பட்டா போட்டு கொடுத்தால், போரட்டம் நடத்துவோம் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.