Perambalur: Two cows tied to a tree by a farmer were killed in a lightning strike!
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று மதியமும் இடி மின்னலுடன் மழை பல இடங்களில் பெய்த நிலையில், பெருமத்தூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் இடி தாக்கியதில், அதே ஊரைச் சேர்ந்த கண்ணுசாமி மனைவி பிரபாவதி (42), சொந்தமான இரண்டு பசுமாடுகளை மரத்தில் கட்டி வைத்திருந்த 2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
இது குறித்து, வருவாய் மற்றும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.