Perambalur: Two people in the same village committed suicide by hanging themselves in separate incidents! Police investigating!

பெரம்பலூர் மாவட்டம், தெரணி கிராமத்தில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்த செல்வம் மகன் நீலகண்டன் (32). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பனை மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதில் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு வாரமாக நீலகண்டன் உடல்நிலை மோசமானதால் கடும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி கவிதா கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு பாடாலூரில் உள்ள தேவாலயத்திற்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது கணவர் நீலகண்டன் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அதே கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கமலை மகன் சன்னாசி (தொழிலாளி) உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையதாததால், மனமுடைந்த சன்னாசி வீட்டில் அருகே உள்ள தகர கொட்டகையில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இருசம்பவங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் இருவரின் சடலங்களை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த நீலகண்டன் மனைவி கவிதா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!