Perambalur: Una Villa [Food Home] opened its 4th branch in Eraiyur; Kothari Managing Director Rafeeq Ahmed inaugurated it!
நூற்றாண்டு பெருமைகளை கொண்ட கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் நிறுவனம் (KICL) தற்போது உணவு துறையிலும் தடம்பதித்து வளர்ந்து வருகிறர். இந்நிறுவனம் ‘உணா வில்லா’ எனும் சங்கிலித் தொடர் உணவகங்களை ஆங்காங்கே திறந்து வருகிறது.
தற்போது, சென்னை நுங்கம்பாக்கம், அடையார், முகப்பேர் பகுதிகளில் ‘உணா வில்லா’ உணவகங்கள் திறக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது, அதன் தொடர்ச்சியாக, இன்று காலை அதன் நான்காவது கிளை பெரம்பலூர் மாவட்டம், சர்க்கரை ஆலை – எறையூரில் (திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில்) திறப்பு விழா நடந்தது. கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஜே. ரஃபீக் அஹமது திறந்து வைத்தார்.
ஏற்கனவே, எறையூரில் ஜே.ஆர்.ஒன் கோத்தாரி நிறுவனத்தின் தோல் அல்லாத காலணி உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்பட்டு இதில் 2500 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் எறையூரில் மேலும், ஒரு அடையாளமாக உணா வில்லா உணவகத்தை கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஜே.ரஃபீக் அகமது திறந்து வைத்துள்ளதை பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.
இந்த உணவு இல்லத்தில் தென்னிந்திய உணவுகளை பாரம்பரிய சுவையுடன் வழங்குகிறர். சைவ உணவுகள் மற்றும் அசைவ உணவுகள் பல விதமான உணவுகளை பாரம்பரிய சுவையில் சுகாதாரத்துடன் வழங்குகிறது. அசைவ உணவுகளான மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சால்னா, சால்சா, மட்டன் கிரேவி, சிக்கன் கிரேவி, மீன் வருவல், இளநீர் பாயசம், உள்ளிட்ட பல வகையான உணவுகளை பாரம்பரிய சுவையில் வழங்குகிறது.
குடும்பத்துடன் அனைவரும் உண்டுகளிக்கும் வகையிலும், இரண்டு தளங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏசியில் மேல்தளத்தில் அமர்ந்தவாறு திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை ரசித்துக் கொண்டே உணவருந்தலாம், அல்லது பார்ட்டி கொடுக்கலாம். இந்த உணவகம், தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு மட்டும் அல்லாமல், பெரம்பலூர் – கடலூர் மாவட்ட எல்லைப்புற மக்களுக்கும் சிறப்பாக இருக்கும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கடை ஊழியர்கள், மற்றும் ஜே.ஆர். ஒன், மற்றும் கோத்தரி நிறுவன ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.