Perambalur: “ungalai thedi ungal ooril Project” Date Change : Collector Information
தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வட்ட அளவில் பிரதிமாதம் மூன்றாவது புதன்கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்து மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜுலை-2024 மாதம் மூன்றாவது புதன் கிழமை (17-07-2024) மொஹரம் பண்டிகை என்பதால் “உங்களைத்தேடி, உங்கள்ஊரில்” திட்டத்தின்படி பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் நடத்தப்படும் முகாமானது (18-07-2024) வியாழன் கிழமை நடைபெறும்.
அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் எதிர்வரும் 18.07.2024 வியாழன் அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்து மாவட்ட முதல்நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி களஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெறவுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மற்றும் தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளையும் மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்தல்ல செய்து குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Advertisement: