Perambalur: Union general members’ consultation meeting: District DMK in-charge V. Jagatheesan’s statement!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., வழிகாட்டுதல்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைக்கினங்க,
பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் கீழ்க்கண்ட நாட்களில் மாவட்ட திமுக பொறுப்பாளர்
வீ.ஜெகதீசன்(எனது) தலைமையில் நடைபெற உள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கே.என்.அருண்நேரு.எம்.பி., பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் தங்க.சித்தார்த், குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் ஏ.கே.அருண் கலந்து கொள்கின்றனர்.
26-02-2025, அன்று காலை 10 மணி வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு , வி.களத்தூர், ஏ.டி.எம் திருமண மண்டபத்திலும், மாலை 4 -மணிக்கு பெரம்பலூர் நகர திமுக சார்பில், . பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்திலும், மாலை 5 -மணி வேப்பூர் தெற்கு ஒன்றியத்திற்கு குன்னம் பி.கே.எம். திருமண மண்டபத்திலும்,
27 -02 -2025, அன்று காலை 10 -மணி- வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்கு , கிருஷ்ணாபுரம் JPS திருமண மண்டபத்திலும், மதியம் 12 -மணி, ஆலத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்கு கொளக்காநத்தம் கலைஞர் திடலிலும், மாலை 5- மணி,வேப்பூர் வடக்கு ஒன்றியத்திற்கு சு.ஆடுதுறை ஏ.கே.ஜி, திருமண மண்டபத்திலும்,
28- 02-2025, அன்றுகாலை 10 மணி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்கு, செட்டிகுளம் கே.எம்.எம்.டி. திருமண மண்டபத்திலும், மதியம் 12 -மணி பெரம்பலூர் ஒன்றியத்திற்கு பெரம்பலூர் முத்துகிருஷ்ணா மக்கள் மன்றத்திலும் கூட்டங்கள் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கூட்டத்தை சிறப்பாக நடத்திட வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.